திருவிற்குடி வீரட்டம்

இறைவர் : வீரட்டநாதர், வீரட்டேசுரர்
இறைவி : ஏலவார்குழலி

பதிகம் : சம்பந்தர் 1

கோயில் சிறிது. கட்டுமலைமேல் இருக்கிறது. இது அட்ட (எட்டு) வீரட்டத் தலங்களுள் ஒன்று. சிவபெருமான் சலந்தாசுரனை வதைத்த தலம். திருவிழாத் திருமேனியின் திருக்கையில் சக்கரம் உண்டு. கோயிலுக்கு பின்புறம், மெய்ஞ்ஞானேசுரரது சிறிய கோயிலும், எதிரில் சக்கர தீர்த்தமும், பக்கத்தில் பிருந்தையின் துளசிமாடமும் உள்ளன. பிருந்தை மயானம் என்றும் இத்தலத்துக்கு ஒரு பெயர் உள்ளது.

சோழநாடு, காவிரி தென்கரை : 74