திருக்கருகாவூர் (திருக்களாவூர்)

இறைவர் : முல்லைவனநாதர், மாதவிகுணேசுவரர், வெள்விடைநாதர், ஸ்வேதரி ஷபேஸ்வரர்
இறைவி : கருக்காத்தநாயகி, கரும்பனையாள், காவியங்கண்ணியம்பாள்

(கற்பக விநாயகர்)

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தலமரம் : முல்லை
தீர்த்தம் : பால்தீர்த்தம்

பெரிய கோயில். 5 நிலை இராசகோபுரம். வெட்டாற்றின் தென்கரையில் உள்ளது. ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு உமையம்மையார் மருத்துவம் செய்து, கருவைக் காத்தமையால் இப்பெயர் உண்டாயிற்று. கணபதி நந்தி மூலவர் சுயம்பு என்பர். முல்லைக்கொடி சுற்றிய அடையாளத்துடன் மூலவர் பெரியவளவில் எழுந்தருளி உள்ளார். இத்தலத்துக்கு முல்லைவனம் என ஒரு பெயரும் உண்டு.

மயிலாடுதுறை-கும்பகோணம் மார்க்கம் பாபநாசம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 6 கி.மீ. ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 18