திருக்கீழ்வேளூர் (கீவானூர்)

இறைவர் : கேடிலியப்பர், அட்சயலிங்கேசுவரர்
இறைவி : வன்முலைநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : சிவஞான தீர்த்தம், சரவணப்பொய்கை
தலமரம் : இலந்தை

கோயில் பெரிது. இறைவர் கட்டுமலைமேல் இருக்கிறார். கோயில், விமானம் எல்லாமே கருங்கல் திருப்பணி. முருகக்கடவுள் பூசித்த திருவூர். அவருடைய பூசைக்கு இடைஞ்சல் நேராதபடி 5 திக்குகளில் அம்பாள் காவல் புரிந்தார். அதனால் அவர் அஞ்சுவட்ட அம்பாள் எனப்படுகிறார். முருகன் சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் சிறப்பாய் அமைந்துள்ளன. அம்பலவாணர் அகத்தியருக்கு வலக்கால் திருவடியை காட்டி, அருள் புரிந்தார்.

திருக்கீழ்வேளூர் ஒரு இருப்புப்பாதை நிலையம். திருவாரூருக்கு கிழக்கே 11 கி.மீ. ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 84