திருக்கயிலாயம்

இறைவர் : கைலாசநாதர்
இறைவி : பார்வதி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 4 + சுந்தரர் 1 = ஆக 7

இதனை சுந்தரர் நொடித்தான்மலை என கூறுகிறார். இது இப்போது சீனாவுடன் இணைக்கப் பட்டுள்ளது. மானசரோவரம் முதலிய பல தீர்த்தங்கள் உண்டு. சுந்தரரும், சேரமான் பெருமானும் மனித உடலோடு முறையே வெள்ளை யானை மீதும், குதிரை மீதும் வானவழியே கயிலை சென்றனர். கயிலைக்கு சென்றுகொண்டிருந்த நாவுக்கரசர் அடைந்த துன்பங்களைக் கண்டு சிவபெருமான் அவருடைய எண்ணத்தையும், பயணத்தையும் தடுத்து, தமிழ்நாட்டிலே, திருவையாற்றிலே இம்மலையின் காட்சியை தந்து, அருளினார். சற்றொப்ப கடல் மட்டத்துக்கு மேல் 23,000 அடி உயரம் உள்ளது. 43 கி.மீ சுற்றளவு கொண்டது. பயணம் கடினமானது. சிலர் கயிலை யாத்திரை சென்றிருக்கிறார்கள். கயிலை யாத்திரை பற்றி நூல்கள் வெளிவந்திருகின்றன. அவற்றைப் படித்து, பயணம், மற்றும் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

வடநாடு : 5