திருமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)

இறைவர் : நீலகண்டர்
இறைவி : அமிர்தகரவல்லி, மங்களேசுவரி

பதிகம் : சுந்தரர் 1

சிறிய கோயில். திருக்கோயிலின் முன் நல்ல ஆழமான பெரிய தீர்த்தக் குளம். 7 படிகளைக் கொண்ட சிறு மலைமேல் உள்ளது. கோயில்கள் இரண்டு. முதலாவது தருமர் பூசித்த நீலகண்டேசுவரர் என்ற சிவலிங்க மூர்த்தி. இரண்டாவது அருச்சுனன் பூசித்த மண்ணிப்படிக்கரையீசர் என்ற சிவலிங்கத் திருமெனிக் கோயில். தெற்குத் திருச்சுற்றில் வீமன், நகுலன், சகாதேவன் பூசித்த லிங்கங்கள் உண்டு. திரௌபதை பூசித்த வலம்புரி விநாயகர். மேற்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கியபடி அம்மன் சந்நிதி. 5 நிலை இராச கோபுரம்.

வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 12 கி.மீ தூரம். பட்டவர்த்தி வழியாக மணல்மேடு சென்று, அங்கிருந்து 1 கி.மீ நடந்து செல்லவேண்டும்.

சோழநாடு, காவிரி வடகரை : 30