திருத்தலையாலங்காடு

இறைவர் : ஆடவல்லஈசர்
இறைவி : திருமடந்தை

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : சங்க தீர்த்தம்

கோயில் சிறிது. தாருகாவனத்தில் இருந்த முனிவர்கள் சிவபிரானை நோக்கி அனுப்பிய முயலகனை அடக்கி, அவன் முதுகின் மேல் நடனம் ஆடிய தலம். கோச்செங்கட் சோழர் எடுத்த மாடக் கோயில்களுள் ஒன்று. கட்டுமலைமேல் உள்ளது. பெருந்திருக்கோயில் என்பர்.

பயண வசதி உண்டு. மயிலாடுதுறை-நாகூர் மார்க்கம், கொடராச்சேரி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து, வட-கிழக்கே 10 கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 93