திருத்தருமபுரம்

இறைவர் : யாழ்மூரிநாதர்
இறைவி : தேனமிர்தவல்லி

பதிகம் : சம்பந்தர் 1

அளவான கோயில். சம்பந்தர் யாழ்மூரிப் பதிகத்தை “மாதர் மடப்பிடி” என்னும் தேவாரத்தைப் பாடியதும், அதனை, உடன் சென்ற திருநீலகண்ட யாழ்பாண நாயனார், யாழில் அமைக்க முடியாததனால் வருந்தி, அதனை முறிக்க முயன்றதும், சம்பந்தர் பாணனாரைப் பார்த்து “ஐயரே, யாழை முறிப்பது என்னை? அதனைத் தாரும்” என்று சொல்லி, வாங்கி, பின் அவரிடம் திருப்பிக் கொடுத்து அருளிய தலம். நாயனாரின் தாயார் பிறந்த தலமும் இதுவேயாகும். அருகில் தக்களூர் என்னும் வைப்புத்தலம் உண்டு.

திருநள்ளாற்றில் இருந்து தென்-கிழக்கில் 2 கி.மீ. பேரளம்-காரைக்கால் மார்க்கம், காரைக்காலில் இருந்து மேற்கே 2 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 51