திருத்தெளிச்சேரி (கோயிற்பற்று)

இறைவர் : பார்வதிநாதர்
இறைவி : சத்தியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சத்தி தீர்த்தம்

கோயில் சிறிது. மேற்கு பார்த்த சந்நிதி. சம்பந்தர் அடியார் திருக்கூட்டத்தோடு அங்கு சென்றபோது, “பரசமய கோளரி வந்தார்” என்று முத்துச் சின்னங்கள் ஊத, அதனைத் தாங்காத பௌத்தர் வந்து அவர்களைத் தடுத்தனர். அப்போது நாயனாருடைய பாடல்களை எழுதுபவர், “புத்தர் சமண் கழுக்கையர்” என்னும் பதிகப் பாடலைப்பாடி, புத்தநந்தியின் தலையில் இடி விழச்செய்த வரலாறு நிகழ்ந்த ஊர். பங்குனித் திங்கள் 13-ம் நாள் முதல் 10 நாள்கள் பகலவன் கதிர்கள் விழுகின்றன.

காரைக்கால் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 1 கி.மீ. பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 50