சிவநடனம், சிவானந்தநடனம் (3)


1.   பிரதோஷ நடனம் : திருக்கயிலாய மலையில் தேவர்கள் பார்த்து தருசிக்க அவர்கள் நடுவில் ஆடுவது. இது ஊழிக்காலம் முடிய உலகத் தோற்றம் உண்டாக ஆடும் சிருஷ்டி நடனம்.

2.   ஊர்த்துவ நடனம் : பைரவர் அல்லது வீரபத்திரர் மூர்த்தத்தில் நின்று ஆடுவது. திருவாலங்காட்டில் காளியுடன் ஆடியது. திருத்தில்லையில் கனகசபைக்கு எதிரில் உள்ள நிருத்த சபையில் ஒரு பெரிய தூணில் காணப்படும் சிற்பம் ஊர்த்துவ நடனத்தை சித்தரிக்கிறது.

3.   ஆனந்த நடனம் : திருத்தில்லையில் கனகசபையில் நித்தியமாய், நிரந்தரமாய் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த, அற்புத பஞ்ச கிருத்திய நடனம்.