திருப்பாய்ச்சிலாச்சிரமம் (திருவாசி)

இறைவர் : மாற்றறிவரதர், நீலகண்டேசுவரர்
இறைவி : விசாலாட்சி

பதிகம் : சம்பந்தர் 1 + சுந்தரர் 1 = ஆக 2
தீர்த்தம் : அன்னமாம் பொய்கை, பிரமதீர்த்தம், தாமிரபரணி
தலமரம் : வன்னி

பெரிய கோயில். கட்டுமலைமேல் இருக்கிறது. மூலவர் (சிவலிங்கம்) சுயம்பு. கோயில் மேற்கு பார்த்த சந்நிதி. 5 நிலை இராச கோபுரம். சுற்றுமதில் பெரிது. பிரமோற்சவம் வைகாசி விசாகத்தை ஒட்டி நடைபெறுகிறது. இங்கு நடேசர் பாம்பின் மேல் நின்று, நடனம் ஆடுகிறார் (முயலகன் இல்லை). இறைவருக்கு சடை இல்லை, குடுமிதான் உண்டு. கோயிலைச் சுற்றி, சுற்றுமதிலுக்கு உள்ளும், புறமும் நல்ல குளிர்சியான மரங்கள், சோலை, தோப்பு. கொல்லிமழவன் என்னும் அரசனின் புதல்வியைப் பீடித்த முயலகன் என்னும் நோயை, சம்பந்தர் பதிகம் பாடி, நீங்கவைத்தார். இறைவர் சுந்தரருக்காக ஆயிரம் செப்புக்காசு கொடுத்து, பின் அவற்றை பொற்காசாக்கியவர். அதனாலே இறைவருக்கு மாற்றறிவரதர் என்னும் பெயர் உண்டு.

பயண வசதிகள் உண்டு. விருத்தாசலம்-திருச்சி மார்க்கத்தில், பிச்சாடனார் கோயில் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 5 கி.மீ. திருவானைக்காவில் இருந்து 5 கி.மீ. திருச்சி-சேலம் நெடுஞ்சாலை வழியே செல்லும் பேருந்துகள் இவ்வழியே செல்கின்றன.

சோழநாடு, காவிரி வடகரை : 62