புலீச்சரம் (இளமையாக்கினார் கோயில்)

இறைவர் : யெளவனேசுரர், திருபுலீசுவரர்
இறைவி : யெளவனாம்பிகை, இளமைநாயகி, திரிபரசுந்தரி

தீர்த்தம் : இளமையாக்கினார் திருக்குளம்

கணம்புள்ள நாயனாரும், திருநீலகண்டக் குயவ நாயனாரும், மனைவியாரும் சிவப்பேறு எய்திய திருத்தலம். இது திருத்தில்லையில் உள்ள சபாநாதர் கோயிலுக்கு மேற்கே ½ கி.மீ தொலைவில் இருக்கிறது.

திருவிளக்குத் தொண்டு செய்துவந்த கணம்புள்ள நாயனார் வறுமை வந்துற்ற காலத்தில், தம் திருப்பணியை ஆற்ற இயலாதபோது, தம் முடியை திரியாக எரிக்க முற்பட்டார். இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டார்.

தம் இளமை காரணமாக ஒழுக்கம் தவறி நடந்த திருநீலகண்டக் குயவர், ஊடியிருந்த தம் மனைவியாரைத் தீண்ட முற்பட்டபோது, “எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்” என்றார். “எம்மை என்றமையால், உம்மை மாத்திரமில்லை, எந்தப் பெண்ணையுமே தீண்டேன்” என உறுதி கூறினார். இருவரும் அவ்வுறுதி, அயல் அறியாது இல்லறம் இனிது நடத்தி, இறை அருளலால், குளத்தில் நீராடி, முதுமை நீங்கி, இளமை பெற்று, பேறு பெற்றார்கள்.

இம்மூவர் திருமேனிகளும் தனித்தனியே எழுந்தருளி உள்ளன. திருநீலகண்டரும், மனைவியாரும் நீருள் மூழ்கிய குளம், ‘இளமையாக்கினார் குளம்’ என்ற பெயருடன் திருக்கோயிலுக்கு நேர் கிழக்கே உண்டு. குளத்தின் வடபுறப் படிக்கட்டுச் சுவரில், மிக அழகாக செதுக்கபட்ட நாயனார், மனைவியார், காட்சி கொடுத்து ஆண்ட இடபாரூடர் முதலிய புடைச் சிற்பங்கள் உண்டு. இவ்வூர்களுக்கு நாயனார் குறுபூசைத் தினமாகிய தை விசாகத்தில் அன்று, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் குலாகுலத்தினரின் உபயமாக நிகழும். தொடர்ந்து வெள்ளை இடபத்தில் சுவாமி, அம்பாள் சிவயோகியார், தங்கத்தில் செய்யப்பட்டு, தண்டு திருவோடுகளுடன், நாயனாரும், மனைவியாரும் எழுந்தருள, இறைவர், இறைவியர் கொடுப்பர். பார்க்கப் பரவசம் ஊட்டும். சிதம்பரத்திலே நாயனாரின் பெயரினால், போல் நாராயணபிள்ளை தெருவில் ஒரு திருமடம் இருக்கிறது.

பர்மாவில் தொழில் செய்துவந்த நகரத்துப் பெருமகனார் ஒருவர் 1901-ஆம் ஆண்டு கோயில் முழுவதும் கருங்கல்லால் திருப்பணி செய்து, கும்பாபிஷேகமும் செய்து வைத்தார்கள். வெள்ளி இடபவாகனம், திருவாபரணங்கள், தங்கத்தில் திருவோடு, திருத்தண்டு முதலியனவும் செய்து அளித்தார்கள்.

பயண வசதிகள் சிதம்பரத்துக்கு போல பல உண்டு. மயிலாடுதுறை-திருவாரூர் மார்க்கம், 3 கி.மீ தூரம். தஞ்சாவூர் இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்தில் இருந்து 13 கி.மீ தூரம். வழியாகப் பேருந்தில் வருவதானால் 13 கி.மீ தூரம்.