ஐவகை இலிங்கங்கள்

(1) சுயம்புலிங்கம் : தானே தோன்றியது. திருவாரூர், திருத்தில்லை முதலிய தலங்களில் உள்ள மூலட்டானேசுவரர், திருவொற்றியூரில் உள்ள கடம்பக்கநாதர் முதலியோர். இவர்களுக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆவுடையாருக்கே செய்வது. புனுகுச்சட்டம் சாத்தப் பெறும்.

(2) காணலிங்கம் : விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபித்து வழிபடப் பெற்றது.

(3) தைவிகலிங்கம் : விட்டுணு முதலிய தேவர்களால் தாபிக்கப் பெற்றது.

(4) ஆரிடலிங்கம் : இருடிகளால் தாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதரால் தாபிக்கப்பட்டதும் அதுவே.

(5) மானுடலிங்கம் : மனிதரால் தாபிக்கப்பட்டது. மானுடலிங்கத்தில் உயர்ந்தது தைவிகலிங்கம். அதனின் உயர்ந்தது காணலிங்கம். அதனின் உயர்ந்தது சுயம்புலிங்கம்