ஆதனூர் (மேலாநல்லூர்)

இறைவர் : மகாதேவர்
இறைவி : ஞானாம்பிகை

திருநாளைப்போவார் என்று போற்றப்பெறும் நந்தனார் அவதரித்த தலம். இன்று மேலாநல்லூர் எனப்படுகிறது. திருப்புன்கூரில் இருந்து வில்லியநல்லூர் வரை பேருந்தில் சென்று, அங்கிருந்து ஆதனூர் வரை 4 கி.மீ தூரம் கற்சாலை வழியே, செழிப்பான நன்செய்களின் ஊடாக செல்ல வேண்டும். திருப்புன்கூரில் இருந்து வயல்-வரம்பு வழியே உள்ள பாதை 1 கி.மீ தூரம் இருக்கும். கோயில் சிறிது. கோயிலின் எதிரே நாயனாரின் சிலை, நின்று வழிபாடும் பாவனையில் (திருப்புன்கூர் சிவலோகத் தியாகர் திருமுன்னில், கோபுரத்துக்கு வெளியே இருப்பது போன்று) தனிக்கோயிலில் எழுந்தருளி உள்ளார். கோயிலின் உள்ளே, கைகளில் யாழ் கருவியோடு, இருந்த பாவனையில் ஒரு திருமேனி உண்டு. மகாவிஷ்ணு, பஞ்சலிங்கங்கள் உண்டு. மூலவர் சுயம்பு. கோயிலுக்கு அருகே ஒரு அழகிய மன்றம் உண்டு. “தாட்கே – புனித திருநாளைப்போவார் நினை சமுதாயக்கூடம் மேலாநல்லூர் – 1988” என்ற விளக்கம் உண்டு. உள்ளே நாயனாரின் அழகான சிலை உண்டு.