பெருமங்கலம்

இறைவர் : வன்தொண்டீசர்
இறைவி : அபிராமி அம்மன்

ஏயர்கோன் கலிக்காம நாயனார் திருஅவதாரம் செய்த தலம். இது திருப்புன்கூர் சிவாலயத்துக்கு வடக்கே, 2 கி.மீ தொலைவில் உள்ளது. சிறிய கோயில். நன்செய், புன்செய் தோப்புக்களுக்கு இடையே, சில குடிகளின் நடுவே இருக்கிறது. இது திருப்புன்கூர் திருக்கோயிலோடு இணைக்கப் பட்டாலும், எவ்வித பூசனையும் இல்லை (1991). திருப்புன்கூர் திருக்கோயிலில் இருந்து சிவசாரியாரும், ஒரு பிராமணப் பிள்ளையும் முற்பகல் இங்கு வந்து, தம்முடன் கொணர்ந்த திருவமுதினை படைத்தது செல்வர். வன்தொண்டர், ஏயர்கோன் கலிக்காமர் சிலா விக்கிரகங்கள் தனிச் சந்நிதியில் உண்டு. மற்றும் விநாயகர், சண்டீசர் சந்நிதிகளும் உண்டு. கோயிலைச் சுற்றி சிறிய மதில். மதிலுக்குள் முள்ளு, கல்லு, புல், பூண்டு, எருவராட்டி, பழம் முள்ளுக்கம்பி, உடைந்த தகரம், போத்தல் முதலியவற்றிற்கு குறைவில்லை.

திருப்புன்கூரில் இருந்து நடந்துதான் செல்ல வேண்டும்.