சிவபெருமானின் மூர்த்தங்கள்

இவை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்கிற ஈசனது ஐந்து முகங்களினின்ரும் பிறந்தன என்று ஆகமங்கள் எடுத்து உரைக்கின்றன.

ஈசனின் ஈசான முகத்தினின்றும் தோன்றிய மூர்த்தங்கள் ஐந்து.

சோமாஸ்கந்த மூர்த்தி : (சோம + உமா + ஸ்கந்த) சாது, சித்து, ஆனந்தம் என்கிற இயல்பான நிலையினை உணர்ந்த உருவெடுத்த உருவாகும். முதலாவதாக சிவன் சுத்தாகவும் (நிலைத்தது), சித்தாகிய (அறிவு) முருகன் நடுவிலும், இறுதியாக ஆனந்தம் (மகிழ்ச்சி) அம்மையாகவும் இணைந்து நிற்கின்றனர். இதுவே சிவாலயங்களில் முதன்மையான மூர்த்தியாகும். சோமாஸ்கந்த மூர்த்திக்கு உகந்த தலம் திருவாரூர்.

நடராஜா மூர்த்தி : பஞ்சாக்கரத்தையும், பஞ்ச கிருத்தியங்களையும் நிதர்சனமாக விளக்கவந்த திருவுருவமாகும். ஆனந்ததாண்டவ கோலத்தில், எல்லா சிவாலயங்களிலும் இடம் பெற்றிருக்கிறது. 5 சபைகளில் ஒன்றாகிய பொன்னம்பலம் திருத்தில்லையில் உள்ளது. ஈசன் உவந்து ஆடும் திருத்தலம் தில்லையாகிய சிதம்பரம்.

ரிஷபாரூட மூர்த்தி : தருமதேவரான ஈசரின் அம்சமான காளையின் மீது அமர்ந்து, தேவியாரோடு தரும் காட்சியாகும். இத்தகு புனித காட்சிக்கு இடனாகிய தலம் நான்மாடக்கூடலாகிய மதுரை.

சந்திரசேகர மூர்த்தி : 3-ம் பிறைச் சந்திரனை முடியில் அணிந்து, அவனின் சாபத்தை நீக்கியருளிய வடிவம். இவர் உமாதேவியுடன் இணைந்து, நின்ற நிலையில் இவரது திருவுருவம் பெரும்பாலான கோயில்களில் இடம் பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இவர் விரும்பி அருட்காட்சி அளிக்கும் திருத்தலம் திருப்புகலூர்.

கல்யாணசுந்தர மூர்த்தி : இமவானின் மகளான அன்னை பார்வதியைத் திருமணம் செய்துகொண்ட கோலத்தில் ஈசன் காட்சியளிப்பர். இத்திருமேனி உள்ள தலம் திருமணஞ்சேரி, திருவீழிமிழலை.

தற்புருஷ மூர்த்தங்கள் ஐந்து
பிஷாடனர், காமரி மூர்த்தி : துணைவியர் உமையம்மையைப் பிரிந்து, சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்து, நிட்டையில் அமர்ந்த நிலையில், மன்மதன் மலர் அம்புகளை கணையாக எய்தான். அதனால் நிட்டை குலைவுற்ற எம்பெருமான் சினந்து, நெற்றிக்கண்ணைத் திறந்தார். காமன் கனல்வைப்பட்டு எரிந்தான். இத்திருக்கோலம் திருக்குறுக்கை வீரட்டத்தில் உண்டு.

கால்சம்கார மூர்த்தி : இத்திருமேனியை, திருக்கடவூரில் காணலாம்.

சலந்தரதாரி மூர்த்தி : சலந்தரன் ஒரு அசுரன். சிவபெருமானின் வியர்வையில் தோன்றியவன். தேவர்களுக்கு பகைவனாக நின்றவன். ஒருசமயம் சிவனடியின் காலடியில் கீறிய சக்கரத்தை எடுக்க அவன் முயலும்போது, அதுவே அவனைக் கொன்றது. இதனால் இந்நாமம் பெற்று, ஏற்றித் துதிக்கப் பெற்றார். இத்திருமேனி திருவிற்குடி வீரட்டத்தில் காணலாம். வேறெங்கும் காண்பது அரிது.

திரிபுராரி : (திரிபுராந்தகர்) 3 கோட்டைகளை நிறுவி ஆட்சி புரிந்த 3 அரக்கர்களை, சிவன் 4 வேதங்களும், 4 சக்கரங்களாய் அமைந்த தேரில் ஏறிச்சென்று, தனது புன்சிரிப்பினால் எரித்த திருக்கோலம். திருவதிகை வீரட்டத்தில் தேர் முதலியவற்றையும், வில் ஏந்திய திரிபுராந்தகன் விழாத் திருமேனியையும் தரிசிக்கலாம்.

அதோமுக மூர்த்தங்கள் ஐந்து
கஜசங்கார மூர்த்தி : (கஜாரி) தாருகாவனத்து ரிஷிகள் ஏவிய யானையின் தோலைக் கிழித்து, அதனை அழித்து, அதன் தோலை தன்மேல் போர்த்திக்கொண்ட திருவுருவம். இத்திருவுருவத்தை வழுவூரில் கண்டு தரிசிக்கலாம்.

தட்சிணாமூர்த்தி : தென்முகக்கடவுள். குரு. கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு ஞானோபதேசம் அளிக்கும் திருக்கோலம். திருமயிலாடுதுறை, ஆலங்குடி, திருப்பூந்துருத்தி, ஓமாம் புலியூர் முதலிய தலங்களில் தரிசிக்கலாம்.

கிராதமூர்த்தி : அருச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கிய திருக்கோலம். திருவேட்களம் என்னும் தலத்தில்

வீரபத்திரர் : திருப்பறையலூர், திருவெண்காடு

நீலகண்ட மூர்த்தி : ஆலகால விஷத்தை அருந்தி, கண்டத்தில் இருத்தி, தேவர்களை காத்து அருளிய கோலம். சுருட்டப்பள்ளி என்ற தலத்தில் இக்கோலத்தில் சிவனை தரிசிக்கலாம்.

வாமதேவ மூர்த்தங்கள் ஐந்து
கங்காள மூர்த்தி : திருச்செங்காட்டம் குடியில் இத்திருமேனியை தரிசிக்கலாம்

சக்கரதானார் : திருமால் சிவபெருமானுக்கு பூசை செய்ய, ஆயிரத்தில் ஒரு மலர் குறைய, தம் கண்ணையே பிடுங்கி, மலராக அர்சிக்கப்பெற்ற திருக்கோலம். இத்திருக்கோலம் மிக அழகாக திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கிறது.

கஜாத்திகர் : ஐராவதத்துக்கு அருள் பாலித்த திருவுருவம்.

சண்டேசானுக்கிரக மூர்த்தி : சண்டேசுர நாயனாருக்கு அண்டர் பிரான், “அனைத்து நாம் உண்ட களமும், உடுப்பனவும், சூடுவனவும் உனக்காக"