திருஉத்தரகோசமங்கை

மாணிக்கவாசக சுவாமிகளின் வாழ்வில் முக்கிய இடத்தை பெறுகிற தலம். நீத்தல் விண்ணப்பம் இங்குதான் அருளிச்செய்தார். வேதத்தின் நுட்பங்களை, கற்க இயலாத உமாதேவியார், பூவுலகில் ஒரு வேதியரின் மகளாகப் பிறந்து, வளர்ந்து, வேதங்களைக் கற்று, தன்னை மணம் புரிந்து கொண்ட இறைவனிடம், அதன் நுட்பங்களை திரும்பிக் கூறிய தலம். அம்பிகை இத்தலத்தின் மான்மியத்தை வினவ, இறைவன் உத்தரத்தை (கோசம்) இரகசியமாகக் கூறியதால் இப்பெயர் பெற்றது என்பாரும் உண்டு. மிகப் பழைய, பெரிய கோயில். சுவாமி சந்நிதிக்கு வலது புறம் அம்பாள் சந்நிதி. இரண்டு கோயில்களுக்கும் தனித்தனியே பெரிய இராச கோபுரங்கள், திருப்பணி செய்யவேண்டிய நிலையில் உள்ளன. இங்கு நடராஜர் விசேஷம். இலந்தை மரத்தின் அடியில், தனிக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்றார். மரகதத்தினால் ஆய திருமேனி. எந்நேரமும் சந்தனக் காப்பிட்டு இருக்கும். உச்சிக்காலப் பூசை சிறப்பு. தேவாரத் திருப்பதிகங்கள் இல்லை. மூவர் முதலிகள் தரிசித்ததாக பெரியபுராணத்தில் இல்லை.

இத்தலம், இராமேசுவரம்-மானாமதுரை சாலையில், இராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உண்டு. ரயில், பேருந்து பயண வசதிகள் மிகவும் உண்டு.


பாண்டிநாடு