வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலயம்

இறைவர் : ஜலகண்டேசுவரர்
இறைவி : அகிலாண்டேசுவரி

வட ஆர்க்காடு வேலூர் கோட்டைக்குள் இருக்கும் மிகப் பழைமையான கோயில். தெற்கு வாயிலில் 7 நிலை இராச கோபுரம். உள்ளே தீர்த்தக்குளம். நேரே பெரிய பிள்ளையார் பத்தர்களை வரவேற்கிறார். வடக்குப் பிராகாரத்தில், கிழக்கு நோக்கியபடி அருள்மிகு அகிலாண்டேசுவரி கோயில். இலுப்பை எண்ணெய் கொண்டு தகழியில் தீபம் ஏற்றப்படுகிறது. தெற்கு நோக்கியபடி நடேசர், அம்பாள். இவர்கள் திருமேனிகள் மிகவும் பெரியன. கிழக்கு நோக்கி இணைந்த கோயிலில் அருள்மிகு ஜலகண்டேசுவரர் அழகாக, அருள் பொழிந்து கொண்டிருக்கிறார். கருவறையைச் சுற்றியுள்ள வீதியில் ஐம்பொன் திருமேனிகள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. அழகிய நந்தி, வாகனங்கள் உண்டு. இங்கு நவசக்தி வழிபாடு சிறப்பு. இலுப்பை எண்ணெயினால் விளக்கு ஏற்றுகிறார்கள். அம்மன் சந்நிதியில் பெரிதும், சிறுதுமாகிய அளவில் பல அலங்காரத் தாழிகளில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அறுபத்து-மூன்று திருத்தொண்டர் திருமேனிகள் நடேசரின் எதிரே, சுற்று மாளிகையில் எழுந்தருளி உள்ளார்கள். கோயில் முழுவதும் கருங்கல் திருப்பணி. மாடக்கோயில். பிராகாரங்களில் திருமாளிகைப் பத்தி உண்டு. வசந்த மண்டபம், சித்திர மண்டபம், வாகனசாலை முதலியன உண்டு. தேவாரப்பாடல் பெறவில்லை. எனினும் நல்ல அருமையான சிவனுறையும் இடம். பார்த்து தரிசிக்க வேண்டியது. வேலூர் இறைய மக்கள் வாழ்கையில் சிறந்த இடம் வகிக்கிறது.

பயண வசதிகள் உண்டு.