பாடலிபுத்திரம்

கோயில் இப்போது அழிந்துவிட்டது. திருப்பாதிரிப்புலியூர் என்னும் சிவத்தலம். அதன் பக்கத்தில் இருந்தது. பாடலம் – பாதிரிமரம். தலமரம். முன்னாளில் அதுசார்புடைய அரசரது தலைநகரமாயும் இருந்தது. அதனுள் சமணர் பள்ளி, பாழி முதலியன ஓங்கி இருந்தன. சைவத்தின் மேன்மையை அறிந்த பின், சமணசமய மன்னனான குணபரன் (மகேந்திர பல்லவன் 600-630 கி.பி) அங்கிருந்த பள்ளிகளையும், பாழிகளையும் இடித்து, இங்கே கொணர்ந்து, குணபரவீச்சரம் என்னும் கோயிலைக் கட்டினான். இது திருவதிகை வீரட்டத்துக்கு அண்மையில் உள்ளது.

கௌதம புத்தரின் காலத்தின் அணிமையில் வாழ்ந்து, வடநாட்டை ஆண்ட தேவானம்பிரிய என்னும் மௌரிய அரசன், பாடலிபுத்திரம் என்னும் பெயர்கொண்ட தலைநகரில் இருந்து ஆட்சி செலுத்தினான். அப்பெயராலேயே இங்கும் தலைநகரம் கண்டனர் என்ப.