திருபுவனம்

இறைவர் : கம்பகரேசுவரர் சுவாமி
இறைவி : அறம்வளர்த்த நாயகி

திருபுவனம், வில்வவனம், திருபுவனவீபுரம் முதலிய பெயர்களைக் கொண்டது. சோழ நாட்டில் காவிரிக்கு தென்கரையில், சோழர் காலத்திய தமிழ்நாட்டு கட்டிடச் சிற்பக்கலையின் உயர்சிக்கும், சிறப்புக்கும் சான்றாக நிற்கும் திருக்கோயில். இது மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (1178 – 1216) எழுப்பப் பெற்றது. இரணியகசிப்பு என்ற அரக்ககனை சங்கரித்து, அவன் இரத்தத்தைக் குடித்த மயக்கத்தால் உலகை நடுங்கச் செய்த நரசிங்க மூர்த்தியின் வலிகெடுத்து, சிவபெருமான் கொண்ட சரபமூர்த்தம் எழுந்தருளி உள்ள தனிச்சிறப்புக் கொண்ட கோயில். வரகுணபாண்டியனது பிரமபாதக நடுக்கதை தீர்த்த தலம். இச் சரபமூர்த்தத்தை வேறு எக்கோயிலிலும் காண்பது அரிது. திருத்தில்லையிலே நடேசர் கோயிலின் நிருத்த மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார். ஈழத்து திருக்கேதீஸ்வரத்தில் திருமேனி உண்டு. இன்னும் பிரதிட்டை செய்யப்படவில்லை (1997). இத்தலத்திலே பங்குனி மாதத்தில் உருத்திரபாதத் திருநாள் என்னும் பிரமோற்சவம் 15 நாள் சிறப்பாக நிகழுகின்றது. இக்கோயில் தேவார மும்மணிக்கட்டுக்குப் பிற்பட்டமையால், தேவாரப் பதிகம் எதுவும் இல்லை.

இது கும்பகோணம்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில், 5 கி.மீ தூரத்தில், நகரின் நடுவே இருகின்றது. பயண வசதிகள் நிறைய உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை