திருமுறைகள் (பண் வகுத்தல், வகுத்தவர்)

திருதில்லையிலே காப்பிடப்பட்டு மறைந்திருந்த திருத்தேவாரப் பாசுரங்களை, திருச்சிற்றம்பலவன் திருவருளினாலும், சிவபாதசேகரம் என்றும், அபயகுலசேகரன் என்னும் இராஜராஜப் பேரரசன் பேரருளினால், திருநாரையூர் பொள்ளபப்பிள்ளையார் கருணைக்கடலால், அவர்தம் திருவருள் பெற்று, அவர் தமக்கு பூசையை அன்போடு செய்துவந்த நம்பியார் நம்பிகள் வெளிக்கொணர்ந்தனர். பின் அவற்றை, அவர் திருமுறைகளாக வகுத்து, பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.

அவ்வேளை தமிழ்நாட்டில் சிற்சில கோயில்களில் சிற்சில தேவாரங்கள் பரவலாக பண்ணோடு பாடப்படுவதை உணர்ந்த இராஜராஜன், தொகுக்கப்பட்ட தேவாரங்களுக்குரிய பண்கள் இலையே என வருந்த, ஆகாயத்தில் ஓர் ஆணை பிறந்தது. அதன்படி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் சைவசமயத்தை நிலைநாட்டிய திருஞானசம்பந்தருடன் பரிசனனாக விளங்கிய திருநீலகண்டப் பெரும்பாணரின் திருமனைய மனைவியார் மதங்கசூளாமணியாரின் மரபுவழித் தோன்றிய ஒரு பெண்ணினல்லாள் வகுத்த நெறிவழியே, அவற்றுக்கு பண்கள் அமைக்கப்பெற்றன.

அப்பொழுது தேவாரத் திருமுறைகள் பதினொன்றாக வகுக்கப்பட்டன. அம்முறை திருவாவடுதுறை திருஆதீன முறை எனப்படுவது. இராஜராஜன் காலத்துக்கு 3 நூறாண்டுகளின் பின் வாழ்ந்த இரண்டாம் குலோததன் மாகமன்னன் காலத்தில் திருத்தொண்டர் புராணம் திருத்தில்லையில் அரங்கேறியபின், அதனைப் பன்னிரெண்டாம் திருமுறையாக்கி, பன்னிரண்டு திருமுறைகளையும் செப்பேடுகளில் பொறித்தருளினார்.