அடிமைத்திறத்தின் சிறப்பு

இது பொருந்திய தலம் திருவாரூர். சம்பந்தர், “திருவாரூரான், வரும்போது என்னை வாடல் என்னுங்கொலோ” என்றும், அப்பரடிகள், “நமக்குண்டு கொலோ, ஆரூர் சுவிர் சடையான், தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே” என்றும், சுந்தரர், “எந்தை இருப்பதும் ஆர்றோர், அவர் எம்மையும் ஆள்வாரோ கேளீர்” என்றும் பாடி அருளினார்கள். மேலும் இங்கே, “திருத்தொண்டத்தொகை பாடி அருளப்பட்டமையாயினும், உள்ளே “தொண்டர் தங் கூட்டம் நிறைந்துறை” புறத்தே தேவர்கள் வணங்கி நிற்கும் தேவாசிரியன் என்னும் காவணம் விளங்குகின்றமையனும், இத்தலத்திலே பிறந்து வாழும் அடியார்கள் முன்னமே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று, இனியுமோர் பிறப்பில்லாத பக்கவரன் மக்களே ஆதலின், இவர்களை இறைவன் முத்தியில் செலுத்துகின்றான். இதனாலே இவர்கள் “திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்றும், திருத்தொண்டத்தொகையிலும், “ஆரூர் பிறக்க முத்தி” என்ற பழமொழியிலும் பாராட்டப் பட்டனர்.