ஏமாப்பேறூர் (திருநெய்ப்பேறு)

இப்போது திருநெய்ப்பேறு என்று வழங்கப் பெறுகிறது. நமிநந்தி அடிகள் பிறந்த ஊர். விளக்கு எரிப்பதற்கு நெய் வேண்டி, அதற்குப் பதில் நீரை விளக்கு எரிக்கும் நெய்யாகப் பெற்றவர் என்று காரணப்பெயர் ஆகவும் கூறலாம். இங்கு பழைய சிவாலயம் ஒன்று உண்டு. நமிநந்தி அடிகளுக்கு தனி ஆலயமும் உண்டு. அவர் வாழ்ந்து வந்த மனையையே கோயிலாக ஆக்கி, மக்கள் வழிபட்டு வருகின்றனர் என்பர். அவரது திருவுருவம் பூணூலாலும், முன்குடுமியும் கொண்டு, தோளில் விளக்கு நெய்க்குப்பி விளங்குகிறது. இவ்வாலயம் இந்நாயனார் வழிபட்ட பெருமை உடையது.

இத்தலம் திருவாரூருக்குத் தெற்கில், திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 6 கி.மீ.