உருத்திர கணிகையர்

(1) பரமசிவனுக்கு தாங்கள் செய்ய வேண்டிய ஊழியம் செய்துகொண்டு, திருமணம் இன்றி, ஒருவரையே கணவராக உடையவர்கள். இக்காலத்தில் அந்த நடை தவறிப் போயிற்று.

(2) தனக்கென ஒரு நாயகன் இல்லாத உருத்திரனைப் போல, இவ்வுலகில் தமக்கு நாயகனைக் கொள்ளாமல், உருத்திர நாயகியை நாயகனாகக் கொண்டிருக்கும் உருத்திர கணிகையார்.

(3) வேசியர்க்கு வேறாய் திருமணம் இன்றி, உயர்ந்த சாதியார்களில் ஒருவனை கணவனாகக் கொண்டு, பூசகாலத்தில் சுத்த நிருத்தம் செய்யும் மகளிர்.

(4) பதியிலார், பதியிலார் குலம் – தங்கட்கு ஒரு நாயகனையும் எய்தாதவர்கள் ஆகிய உருத்திர கணிகையர் குளம்.