அதிசூரன்

விலக்க முடியாதபடி அரசர்க்கு வாட்படை பயிற்றும் தொழிலின் உரிமை பெற்ற தாய பாகமுடையவன். அதிசூரன் தாயத்தால் அன்றி வேறு உருமை எதுவும் இல்லான். தன்னையே தான் சாலமித்து, தன்னையே அதிசூரன் என்று செல்லிக்கொள்வான். வெற்றி வடிபாட்படைத் தொழில் கற்றவர்களுள்ளே தன்னை விட மேம்பட்டவர்கள் இல்லை என்னும் எண்ணத்தால், பெருமிதம் அடைந்து, தன்னைத் தானே புகழ்ந்து கொண்டவன். இவன் ஏனாதிநாத நாயனாரோடு போர் இட்டு, தோற்று, புறங்காட்டி ஓடினவன். இப்படி நேர் பொருள் இன்றி, “ஈனமிகும் வஞ்சனை செயலாலே வெல்வேன்” என்று, நெற்றி நிறை வீபூதி பூசி, மீண்டும் போருக்கு வந்து சமர் செய்தான். சமரிலே ஏனாதிநாத நாயனார் அவன் நெற்றி வீபூதியைக் கண்டு வாளா நிற்க, அவன் தன் கருத்தை முடித்தான். நரகம் அடைந்தான். நாயனாரை இறைவர் காட்சி கொடுத்து, பொன்னம்பலத்துக்கு அழைத்துச் சென்றார்.