குணபரவீச்சரம்

இது திருவதிகையில் குணபரன் என்ற காடவர்கோன் எடுத்த சிவாலயம். கோயில் எடுத்தவன் பெயரால் வழங்கப் பெறுகிறது. காடவர் என்பவர் சோழர்களது பல்லவ மரபினர். சிவனுக்கு மகேந்திர பல்லவன், குணபரன் என்ற பெயர்களும் உண்டு. இவன் குகைக் கோயில்கள் பல ஆக்கினான். திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஒரு கல்வெட்டில் இவன், சமண சமயத்தில் இருந்து, சைவ சமயம் தழுவிய செயல் கூறப்பட்டுள்ளது. இவன் சமண சமயத் தலைவர்களின் சொற்கேட்டு, நாவுக்கரசருக்கு பல துன்பங்களைத் தந்ததற்கு கழிவிரக்கப்பட்டு, பழி தீர்க்கும் வகையில், பாடலிபுரத்தில் உள்ள அவர்களது பள்ளிகளையும், பாழிகளையும் அழித்து, இடித்து எடுத்த கட்டிடப் பொருள்களைக் கொண்டு, குணபரவீச்சரத்தை எடுத்தான். இக்கோயிலை நாவுக்கரசர் தரிசித்ததாகவோ, பதிகம் பாடி சிறப்பித்ததாகவோ எங்கும் செய்தி இல்லை. இது திருவீரட்டானத்தில் இருந்து 1 கி.மீ தூரம்.