புகார் (காவிரிப்பூம்பட்டினம்)

பூம்புகார் எனவும் கூறுவார். புகார் சோழர்களது கிழக்குக் கரையோரத்தில், சோழர்களின் செல்வச் செழிப்புக்கு வளம் ஊட்டிய தலைசிறந்த தலைநகரங்களில் ஒன்று. மிகப்பழங்காலத்து தமிழரது நாகரிகம் மிக்க பட்டினம். பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் முதலிய சங்கசங்கமருவிய நூல்களில் இதன் சிறப்பு மிகப்போற்றப்பட்டுள்ளது. கடற்கரை வாணிபமும், தரைவழி வாணிபமும் ஓங்கியிருந்து, பல்வகைக் கலைகள் வளர்வதற்கு நிலைக்களனாக உள்ளது. திருப்பல்லவனீச்சரமும், திருச்சாய்க்காடும் இதன் அமைந்துள்ளன.

பயண வசதிகள் பல உண்டு. சிகாழியில் இருந்து, திருவெண்காடு வழியே, திருச்சாய்க்காடுதிருப்பல்லவனீச்சரம் சென்று, பூம்புகாரை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்தும் செல்லலாம்.