திருத்தலையூர்

சோழநாட்டிலே, குணத்தில் குன்றாக் குலக்குடி குடிகள் குழுமி வாழ்ந்தது திருத்தலை ஊரிலேயாம். இங்கு குல ஒழுக்கத்தில் குன்றா மறையவர் வாழ்ந்தனர். இங்கு உருத்திர பசுபதியார் என்னும் அறுபத்து-மூவரில் ஒருவர் மூழ்கி உருத்திரம் செப்பித்ததாக வழங்கும் திருக்குளம் உண்டு. இன்னும் மறையவர்களால் அவரது வாழ்க்கை திருவிழாவாக அக்குளத்தில் கொண்டாடப் படுகிறது. ஆலயத்தில் நாயனார் திருவுருவம் உண்டு. நாயனார் திருப்பெயரால் ஒரு திருமடம் உண்டு.

பயண வசதிகள் உண்டு. மயிலாடுதுறை-பேரளம் மார்க்கத்தில், கொல்லுமாங்குடி நிலையத்தில் இருந்து 2 கி.மீ.