அநபாயன்


குலோத்துங்கன் II. இவருக்கு பேரம்பலம், பொன்னணி சோழன், அபயன், அநகபாயன், திருநீற்றுச் சோழன் என்று பல பெயர்கள் உண்டு. இவரது அமைச்சர் ஆகிய சேக்கிழார் நாயனார், இவர் விருப்பபடி, திருத்தொண்டர் புராணம் இயற்றினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த அரசர், புராணத்தை அரங்கேற்றி, செப்பேடு செய்து, 12-வது திருமுறையாக வகுத்தனர். இவர் சேக்கிழார் நாயனாரால், புராணத்துள் 12 இடங்களில் உளமார, வானளாவப் போற்றிப் பாராட்டி உள்ளார். உமாபதி சிவாசாரியார், மாதவச் சிவஞான சுவாமிகள் முதலிய பல சிவாநுபூதிச் செல்வர்களாலும் பாராட்டப் பெற்றவர். பேரம்பலமும், திருவெல்லையும் பொன்மயமாக்கியவர். காலம் (?)