முப்பத்திரண்டு அறங்கள்

காஞ்சியில் காமாட்சி அம்மையார் தவம் இருந்து, ஏகாம்பரேசுவரரிடம் இருந்து 2 நாழி நெல் பெற்று, செய்த 32 அறங்கள்:

 1. தேவ யாகம்
 2. பிதிர் யாகம்
 3. பூத யாகம்
 4. மானிட யாகம்
 5. பிரம்ம யாகம்
 6. பற்றறத் துறந்தவர்களுக்கு மடங்கள்
 7. பற்றுள்ள இல்லறத்தார்க்கு வீடுகள்
 8. வீடுகளுக்கு தட்டு-முட்டுச் சாமான்கள்
 9. மணமலர் சேர்த்து அமைத்த தண்ணீர் பந்தல்கள்
10. எங்கும் விளங்கும் பூஞ்சோலைகள்
11. இரப்பவர்களை பாதுகாத்தல்
12. குருடர்களை பாதுகாத்தல்
13. துன்பப்பட்டவர்களை பாதுகாத்தல்
14. கொடிநோய்களை தீர்க்கும் மருந்து
15. பரிசுத்தமான வாயையுடைய பாலரை பாதுகாத்தல்
16. சுண்ணாம்பு
17. தாம்பூலம்
18. எண்ணெய்
19. சீக்காய்
20. புஷ்பசயனம்
21. பூதானம்
22. கோதானம்
23. கன்னிகாதானம்
24. தர்மகல்யாணம்
25. தீபம்
26. தீரக்கடன் தீர்த்தல்
27. உருத்திராட்சம்
28. வீபூதி
29. சிவபூசா பாத்திரங்கள்
30. சைவ ஆகமங்களையும், புராணங்களையும் ஓதுவித்தல்
31. சிவபெருமானின் அடியின் கீழ் தாங்கும் பத்தி மார்க்கத்தை உபதேசித்தல்
32. அபயதானம் அளித்தல்