அநிந்திதை

திருக்கைலாயத்தில் உமாதேவியாருக்கு பணி செய்த இரு சேடியர்களுள் ஒருவர். ஆலாலசுந்தரர் மேல் வைத்த ஆசையினால், பூலோகத்திலே, திருவொற்றியூருக்கு வட-கிழக்கே உள்ள ஞாயிறு என்னும் சிற்றூரில் ஞாயிறுகிழார் என்பவருக்கு திருமகளாராக அவதரித்து, திருவொற்றியூரில் கன்னி மாடம் அமைத்து, அங்கிருந்து கொண்டே, திருவொற்றியூர் திருக்கோயிலில் திருப்பணி செய்தவர். ஒருநாள் கோயிலிலே ஆளுடை நம்பிகளைக் கண்டு, அவரை விரும்பினார். நம்பிகளிடம், இறைவன் திருக்குறிப்பின் படி, பிரியா வகைக்கு ஒரு சபதம் பெற்று, மணந்து, மீண்டும் திருக்கயிலை அடைந்தவர். திருமலைச்சிறப்பு, தடுத்தாட்கொண்ட புராணம், ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், வெள்ளானைச் சருக்கம் முதலியவற்றுள்ளும், நம்பிகள் தேவரங்களுள்ளும் இவர் சரிதம் காணப்படும்.