இளையான்குடி

இறைவர் : ராஜேந்திரசோழீச்சர்
இறைவி : ஞானம்பாள்

பதிகம் : இல்லை

இளையான்குடிமாற நாயனார் அவதரித்த தலம். பரமக்குடியில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் சாலை அருகே உண்டு. பாண்டிநாட்டுக் கோயில்களில் உள்ளது போல் இங்கும் அம்மன் கோயில், சுவாமி கோயிலுக்கு வலது பக்கத்தில், கிழக்கு நோக்கியபடி, தனியே இருக்கிறது. அளவான கோயில். சுவாமி கோயிலின் தென்-கிழக்கு மூலையில், வடக்கு பார்த்தபடி, இளையான்குடிமாற நாயனார் சிலா விக்கிரகம் உண்டு. சுவாமி கோயிலின் உள்ளே திருஅணுக்கன் திருவாயிலின் அருகே, வடக்கு நோக்கியபடி, நாயனார் மனைவியார் இருவரது மிக அழகான ஐம்பொன் திருமேனிகள் எழுந்தருளி உள்ளன. ஆவணியில் ஒருநாள் திருவிழாவில் இவர்கள் இருவரும் திருவீதி உலா. நாயனாரின் வாழ்கையில் 4 கட்டங்கள் அழகான பெரிய ஓவியங்களாக சுவரில் தீட்டப்பட்டுள்ளன. சிதம்பரம் இரத்தின சபாபதிச் செட்டியாரின் 60 ஆண்டு மணிவிழா நினைவாக இளையான்குடிமாற நாயனார் புராணம் கல்வெட்டில் பதிக்கப் பெற்றுள்ளது. ஊரில் முசில்ம்கள் அதிகம். நாயனாரின் குறுபூசையில் அன்று நாயனார் நினைவாக அன்னதானம் செய்கிறார்கள்.

பயண வசதிகள் பல உண்டு.