எயினனூர் (ஏனாநல்லூர்)

இறைவன் : பிரமபுரீசர்
இறைவி : கற்பகாம்பிகை

சோழர்களது வளப்பம் மிக்க சோழநாட்டிலே வண்டுகள் பாடுதற்கிடமாகிய பூக்கள் மிக்க சோலைகள் சூழ்ந்த வயல்களை உடைய மருதத்தின் குளிர்ந்த பண்ணைகளால் சூழப்பட்டதாய், எல்லா திக்குகளிலும் தனது சிறப்பு எறிய பழையவூர் எயினனூராகும். ஏனாதி நாயனாருடைய ஊர். பழைய சிவாலயம் இருக்கிறது. ஒரு வைணவப் பெண்மணியால் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஏனாதி நாயனார், தேவியார் இருவரது திருமேனி தனிச் சந்நிதி இருக்கின்றன. கோயிலின் மேற்கே 1 கி.மீ தொலைவில் ஏனாதி நாயனாரும், அதிசூரனும் போர் செய்த களம் உளது. நாயனாரது குருபூசைத் தினத்தன்று சுவாமி இங்கு எழுந்தருளுகின்றார். இங்கு நாயனார் பெயரால் ஒரு திருமடம் உண்டு.


கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. அழகாபுத்தூரிலிருந்து 2 கி.மீ.தூரம்