29. திருமூல நாயனார்


மேலதிக குறிப்புக்கள்
குலம் : இடையவர்
நாடு : சோழநாடு
ஊர் : சாத்தனூர்
குருபூசை / திருநாள் : ஐப்பசி - அச்சுவினி

ஒரே பார்வையில் ...
வடக்கே திருக்கயிலாயத்தில் இருந்து, தெற்கே பொதியமலைக்கு, அகத்திய முனிவரைக் காண்பதற்காக ஆகாய வழியே சென்றுகொண்டிருந்த முனிவர், திருவாவடுதுறையில் மூலன் என்னும் ஒரு இடையன் இறந்து கிடப்பதையும், அவனைச்சுற்றி அவன் மேய்த்துவந்த ஆனினம் அழுது கொண்டிருப்பதையும் கண்டு, அவற்றின்மீது இரக்கம் கொண்டு, தன் உடலை ஓரிடத்தில் விட்டு, அந்த மூலனுடைய உடலில் புகுந்து, ஆனிரைகளை அவற்றின் இடங்களில் சேர்த்துவிட்டு வந்து, தன் உடலைப் பார்க்க, அதனைக் காணாது, மூலனுடைய உடம்போடு, அங்கு மூவாயிரம் ஆண்டுக்கு ஒன்றாக, மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரம் என்னும் நூலை இயற்றி சிவபதம் அடைந்தார்.