2. பொய்யடிமையில்லாத புலவர்

பொய்யடிமையில்லாத புலவர்கள் “செய்யுள்களாக நிகழவரும் சொற்களைத் தெரிதலையும், செம்மை தரும் பயனுடைய நூல்கள் பலவற்றை நோக்குதலையும் மெய்த்தவாறு உணர்கின்ற உணர்ச்சியின் பயனாவது இதுவேயாகும்” என்று துணிந்து, இறைவரது மலர் போன்ற திருவடிக்கே ஆளானவர்கள். சிவபெருமானை அன்றி வேறொருவரையும் பாடாத நிலையில், தொண்டு செய்த மெய்யடியார் ஆயினர். இவர்கள் தமிழ் வளர்த்த முச்சங்கங்களில், கடைச்சங்கத்தில் இருந்து பாடிய நாற்பத்தொன்பதின்மருள், சிவனையே பாடிய நக்கீரர் முதலாயினோராவர். (புலமையின் பயனாவது சிவனையன்றி வேறு படாத நிலையாம்).

திருநாள் : பங்குனிக் கடைசி நாள்