3. பத்தராய்ப் பணிவார்கள்

பத்தராய்ப் பணிவார்கள் சிவனடியாரைக் கண்டால் பசுவின் கன்றுபோல் அவர்களை அணைவர். சிவபூசை செய்வோரைக் கண்டால் உவந்து பயன் எய்துவர். சிவனடியார்களையும், சிவனையும் வழிபடுவர். தாம் செய்யும் எத்தொழிலும் சிவனுக்கேன்றே அர்ப்பணம் செய்வர். சிவனடியார்கள் வரலாறுகளைப் பத்தி சிரத்தையோடு கேட்பர். ஒருபோதும் சிவனை மறவார். உலகு விளங்கத் தவங்காட்டிப் பயன் பெறுவார். பத்தராய்ப் பணியும் படியினை உலகில் விளங்கச் செய்வர். அவரே சித்தம் பொங்கிய எழுச்சியுடன் பத்தராய்ப் பணிவார்கள்.

திருநாள் : பங்குனிக் கடைசி நாள்