44. சத்தி நாயனார்


சிவனையும், சிவனடியார்களையும் இகழ்ந்து பேசக்கேட்டால், அவ்வாறு பேசியவர்களைத் தண்டித்தல் வேண்டும் என்பது விதி. வாளா கேட்டிருத்தல் சிவாபராதமாம். இங்ஙனம் சிவனடியார்களை இகழ்ந்து பேசியவர்களது நாவினை ஆண்மையுடன் அரித்தெறிந்து, அதனைத் தூய்மை செய்தல் அரிய வீரச் சிவப்பணியாம்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே வரிஞ்சியூர் என்னும் சிவத்தலத்திலே, சிவபெருமானையும், சிவனடியார்களையும் போற்றும் சத்தியார் என்று ஒரு சிவபத்தார் தோன்றினார். அவர் வேளாண்குலத்திலே பக்தி வைராக்கியம் கொண்டு விளங்கினார். அவர் தம் முன்னிலையில் யாரும் சிவாபராதமாக சிவனடியாரை நிந்தித்து இகழ்ந்து செயற்பட்டால், அவர் எவராயினும், அவருடைய நாக்கைக் கத்திகொண்டு அரிந்து, தூய்மைப்படுத்துவார். சிவபத்தியினாலும், சிவனடியார் பத்தியினாலும், இவ் ஆண்மைத் தொண்டினைச் செய்து, சிவபெருமான் திருவடி சேர்ந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : சோழநாடு
ஊர் : வரிஞ்சியூர்
குருபூசை / திருநாள் : ஐப்பசி - பூசம்

ஒரே பார்வையில் ...
சிவனடியார்களைக் குறை கூறி, சிவாபசாரம் செய்தவர்களின் நாக்கை அறித்து, அவர்களை நல்லாற்றுப் படுத்தியவர்.