49. வாயிலார் நாயனார்


சிவனுக்குச் சிறப்பான அகப்பூசையும், முடிவில் புறப்பூசையும் முறையால் செய்வோர் சிவனடிக்கீழ் சிவனடியாரோடு நீங்காது இருப்பர். அகப்பூசைக்கு மறவாமை, ஞானம், ஆநந்தம் முதலியனவே சாதனங்களாம். இத்துணைச் சிறப்பினவாகிய அர்ச்சனைகள் செய்து பேராத பெற்றி பெற்றவர் வாயிலார் நாயனார் ஆவர்.

                  *                                                              *                                                              *

இவர் தொண்டைநாட்டிலே கடற்கரை ஓரமாக உள்ள மயிலாப்பூர் என்னும் திருமயிலையில் வேளாண்மரபில் வாயிலார் குடியில் பிறந்தவர். இவர் இறைவருக்கு மறவாமை கொண்டு, மனமாகிய கோயில் அமைத்து, அறிவாகிய விளக்கும், ஆநந்தமாகிய திருமனமும், அன்பாகிய திருவமுதும் கொண்டு நாள்தோறும் நெடுங்காலம் பூசனை செய்து, சிவனடி நீழலில் அடியாருடனே இருக்கப் பெற்றவர்.

இவருக்கு மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறையும் கபாலீசுவர கோயில் உட்சுற்றில் தனி ஆலயமும், திருமேனியும் உண்டு. சுவரில் அடியாரது புராணம் பொறிக்கப்பட்டுள்ளது. குருபூசை நியமமாக நடைபெறுகிறது.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : தொண்டைநாடு
ஊர் : மயிலாப்பூர்
குருபூசை / திருநாள் : மார்கழி - ரேவதி

ஒரே பார்வையில் ...
மானசமாக ஞான பூசை செய்தவர்.