50. முனையடுவார் நாயனார்


முனையெறிந்து, கூலி கொண்டு, சிவதருமங்கள் செய்தும், சிவனடியார் வேண்டியபடி கொடுத்தலும், நல்ல திருவமுது ஊட்டலும் சிவதருமங்களாம். இப்படிச் செய்து உமையாள் கணவனாகிய சிவபெருமான் திருவருளால் சிவலோகத் தமர்ந்து, பிரியா உரிமை பெற்றவரே முனையடுவார் நாயனார் என்னும் திருத்தொண்டர் ஆவார்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே காவிரியின் வடகரையில் வளம்மிக்க விளங்கும் திருநீடூர் என்னும் சிவத்தலம் ஒன்று உண்டு. அங்கே வேளாளர் குடியில், அவர்களுக்குத் தலைவராய்த் தோன்றியவர் முனையடுவார் என்பவர். இவர் சிவபெருமான் பால் பேரன்பு உடையவர். இவர் பகைவரை போரின் வென்று, பொன்னும், பொருள்களும் கொணர்ந்து, சிவனடியார்களைத் திருவமுது ஊட்டினார். பன்னாள் இங்ஙனம் செய்து, சிவலோகத்தை அடைந்து, பிரியாத உரிமை பெற்றார்.

திருநீடூர் சிவாலயத்தில் இவருக்குத் தனித் திருமேனியும், சந்நிதியும் உண்டு.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : சோழநாடு
ஊர் : திருநீடூர்
குருபூசை / திருநாள் : பங்குனி - பூசம்

ஒரே பார்வையில் ...
கூலிக்குப் போர் செய்து, அக்கூலி கொண்டு சிவனடியாரை வழிபட்டவர்.