5. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்

படைத்தற் கடவுளாகிய பிரமன் முதலாகிய காரணக் கடவுளர் ஐவர்க்கும் உரிய ஐந்து தாமரைகளுடன் இருக்கும் தானங்களைக் கடந்து, மேல் (அப்பால்) சென்று, நிறைவுடையதாய், உள்பொருளாய், சுயம் சோதியாய், உள்ள சிவன் ஞானஒளி விளங்கும் நாதாந்தத்திற் சித்தத்தை நிறுத்தினாலே, சிவனிடத்திலே நிறுத்திய சித்தத்தை உடைமையால், சித்தத்தை சிவன்பாலே வைத்தவர்கள். தன்னிகரற்ற திருவம்பலத்தினுள் விளங்கும் வேதகாரணராகிய ஆடவல்லானின் திருவடித்தொண்டின் வழியிலே அடைந்தவர்.

திருநாள் : பங்குனிக் கடைசி நாள்