61. சடைய நாயனார்

இவர் நடுநாட்டிலே, திருநாவலூர் என்னும் தலத்திலே, ஆதிசைவக்குலத்திலே அவதிரித்தவர். இசைஞானியாரை மணந்து, சுந்தரமூர்த்தி நாயனாரைப் புதல்வராகப் பெறும் பேறு பெற்றவர். திருக்கயிலாயமலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் இருந்து, தென்தமிழ்நாடு வாழவும், திருநீற்றின் ஒளி விளங்கவும், திருநாவலூரிலே அவதரித்து, திருவாரூரிலே பரவையாரையும், திருவொற்றியூரிலே சங்கிலியாரையும் மணந்து, சிவனுக்குத் தம்பிரான் தோழராய் இவர்கள் இருவரிடமும் தூது கொண்டு, சேரமான் பெருமாள் நாயனாருடன் நட்புக் கொண்டு, மீண்டும் கயிலை சேர்ந்த ஆளுடைய நம்பிகளைப் புதல்வனாகக் கொண்டவர்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : ஆதிசைவர்
நாடு : நடுநாடு
ஊர் : திருநாவலூர்
குருபூசை / திருநாள் : மார்கழி - திருவாதிரை

ஒரே பார்வையில் ...
சுந்தரரைப் பிள்ளையாகப் பெற்று, நரசிங்கமுனையரிடம் வளர இசைவு தந்து, புத்தூர் சடங்கவி சிவாசாரியாரின் செந்திரு அனைய புதல்வியைத் திருமணம் செய்விக்க முயன்றவர்.