7. முப்போதும் திருமேனி தீண்டுவார்

எப்போதும் மன்னுயிர்களுக்கு இனியராகிய சிவபெருமான், தம்முடைய இனிய ஐந்து முகத்தின் தோன்றி, அவர் அருளாலே விருத்தியாகி, காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்திப் பொழுதுகளிலும் சிவனை அர்ச்சிக்கும் ஆதிசைவர்களாகிய முனிவர்கள், முப்போதும் திருமேனி தீண்டுவார் எனப்பெறுவார்.

திருநாள் : பங்குனிக் கடைசி நாள்

சிவவேதியர்கள் சிவசிருட்டியாக சிவபெருமானின் ஐம்முகங்களில் இருந்து தோன்றி, சிவபரார்த்த பூசை, சிவாகம விதிப்படி செய்து, சிவார்ச்சனையை மூன்று காலமும் செய்வர். சிவவேதியர்களே வேதாகமம் இரண்டற்கும், ஆன்மார்த்த பரார்த்த பூசைகள் இரண்டற்கும், வேதங்களின் ஞானகாண்டத்தின் உட்பொருளாகிய சிவனது பூசைக்கும் உரியனவாகும்.