சேக்கிழார் நாயனார்

வேளாளர். தொண்டைநாடு. குன்றத்தூர். சோழ மன்னன் குலோத்துங்கனால், உத்தமசோழப் பல்லவராயன் என்னும் சிறப்புப் பட்டம் வழங்கப்பெற்று, தனக்குக்கீழ் முதல் அமைச்சராக இருந்தவர். சீவகசிந்தாமணி என்னும் ஆருகத நூலைப்படித்து, அதில் மயங்கியிருந்த அநபாய சோழ மகாராவுக்கு (II குலோத்துங்க சோழருக்கு) திருத்தொண்டர்களுடைய வரலாற்றைக் கூறியவர். அவர் விரும்பியபடி திருத்தொண்டர் (பெ.பு) புராணத்தை (பெ.பு), தில்லைச் சபாநாதர், “உலகெலாம்” என அடியெடுத்துக் கொடுக்க, பாடி நிறைவேற்றியவர். அதற்காக மன்னரால். ‘தொண்டர் சீர்பருவுவார்’ எனப் பெருமைப் படுத்தப் பெற்றவர். குன்றத்தூரில் தம் ஆன்மார்த்த திருநாகேச்சரர்க்கு கோயில் எழுப்பி வழிபட்டவர்.

திருநாள் : வைகாசி - பூரம்